Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவத்தை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடுவோம்; வடகொரிய அமைச்சர் தகவல்

ராணுவத்தை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடுவோம்; வடகொரிய அமைச்சர் தகவல்

By: Nagaraj Sat, 13 June 2020 09:16:30 AM

ராணுவத்தை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடுவோம்; வடகொரிய அமைச்சர் தகவல்

ராணுவத்தை கட்டமைக்கும் பணி... அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ராணுவத்தை கட்டமைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என, வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி சோன் குவோன் கூறியுள்ளார்.

கிழக்காசிய நாடான வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியா மீது, பல பொருளாதார தடைகளை விதித்தார். இது, இரு நாடுகளுக்கும் இடையே கடும் உரசல்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 2018 ஜூன், 12ல் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர்.

america,threat,north korea,military,encounter ,அமெரிக்கா, அச்சுறுத்தல், வடகொரியா, ராணுவம், சந்திப்பு

அதில், இருதரப்பு உறவு களை மேம்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், வியட்நாமில், இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசினர்.

ஆனால் அந்த சந்திப்புகள்பலனளிக்கவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில், டிரம்ப், கிம் இடையிலான முதல் சந்திப்பு நடந்து, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி சோன் குவோன் கூறியதாவது:

சிங்கப்பூரில், வடகொரிய அதிபர் கிம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையில் நடந்த சந்திப்பு போல், மீண்டும் நடைபெறுமா என்பது சந்தேகமே. அந்த பேச்சுவார்த்தை மூலம், இருதரப்பு உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.எனவே, எந்த பலனும் இன்றி, வெற்று வாக்குறுதிக்காக, டிரம்பிற்கு இனி வாய்ப்பு வழங்கப்படாது. அவரின், அரசியல் சாதனைகளுக்காக நடத்த விரும்பும் இது போன்ற சந்திப்பு, இனி நிகழாது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, எங்கள் நாட்டு ராணுவத்தை கட்டமைக்கும் பணிகளில், தொடர்ந்து ஈடுபடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்

Tags :
|