Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்; இந்திய கம்யூ., மாநில செயலாளர் திட்டவட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்; இந்திய கம்யூ., மாநில செயலாளர் திட்டவட்டம்

By: Nagaraj Mon, 29 Aug 2022 07:31:33 AM

எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்; இந்திய கம்யூ., மாநில செயலாளர் திட்டவட்டம்

சென்னை: எட்டு வழிச்சாலையை எதிர்ப்போம்... சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்ப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழக முழுவதும் நாளை 30 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அனுமதிப்பதில்லை. வருமானத்தை அதிகரிக்காத நிலையில் விலைவாசி உயர்வால் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வர முயற்சிகிறது. மின் துறை அரசாங்கத்திடம் வந்த பின்னர் தான் கிராமங்களில் தெரு விளக்கு, குடிசை வீடுகள், விவசாயிகளுக்கு இலவசமாக கிடைக்கிறது.

Tags :