Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுக்கு முழுமையான ஆதரவு அளிப்போம்; ஜோபிடன் அறிவிப்பு

இந்தியாவுக்கு முழுமையான ஆதரவு அளிப்போம்; ஜோபிடன் அறிவிப்பு

By: Nagaraj Sun, 16 Aug 2020 10:44:09 AM

இந்தியாவுக்கு முழுமையான ஆதரவு அளிப்போம்; ஜோபிடன் அறிவிப்பு

இந்தியாவுக்கு முழு ஆதரவு...பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக இந்தியாவுக்கு முழுமையான ஆதரவளித்து துணை நிற்போம் என்று அமெரிக்க அதிபருக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த ஜோ பிடன் இந்திய -பசிபிக் கடல் பகுதியில் சீனா உள்ளிட்ட எந்த பக்கத்து நாடும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை அளிக்காத வகையில் அமெரிக்கா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

joe biden,indian descent,support,announcement,action ,ஜோ பிடன், இந்தியா வம்சாவளி, ஆதரவு, அறிவிப்பு, நடவடிக்கை

எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்த ஜோ பிடன், இந்திய வம்சாவளியான அமெரிக்கர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்தால் சட்டப்படி அங்கீகாரம் பெறாத 5 லட்சம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டவருக்கு சட்டரீதியான குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

Tags :