Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலவச மின்சாரத்தை நிறுத்த மாட்டோம்...டெல்லி மக்களுக்கு உறுதியளித்த முதல்வர்

இலவச மின்சாரத்தை நிறுத்த மாட்டோம்...டெல்லி மக்களுக்கு உறுதியளித்த முதல்வர்

By: Nagaraj Wed, 05 Oct 2022 9:16:04 PM

இலவச மின்சாரத்தை நிறுத்த மாட்டோம்...டெல்லி மக்களுக்கு உறுதியளித்த முதல்வர்

டெல்லி: ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்களை நம்புங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த மாட்டேன் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மின் கட்டணத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர், இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது. இதேபோல், 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு டெல்லி அரசு மானியம் வழங்குகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி அரசின் மின் மானிய திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.

arvind kejriwa,bsis directed,capital delhi,electricity,governor ,அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி அரசு, டெல்லி, மின் கட்டணம், விசாரணை

இந்நிலையில், பிஎஸ்இஎஸ் டிஸ்காம்களுக்கு ஆம் ஆத்மி கட்சி வழங்கிய மின் மானியத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் இந்த உத்தரவுக்கு பிறகு இன்று அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் விரும்புகின்றனர்.

அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்களை நம்புங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த மாட்டேன். குஜராத் மக்களே உங்களுக்கும் உறுதியளிக்கிறேன். ஆம் குஜராத்தில்.” ஆத்மி அரசு அமைந்தால், அடுத்த ஆண்டு மார்ச் 1 முதல் உங்களுக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும்.

Tags :