தொடவே மாட்டோம்... ஆனால் விடவும் மாட்டோம்; போலீசாரின் புதிய டெக்னிக்
By: Nagaraj Tue, 16 June 2020 7:00:08 PM
செம டெக்னிக்கோடு களம் இறங்கி உள்ளனர் போலீசார். என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 'தொடவும் மாட்டோம்... விடவும் மாட்டோம்' என்பதுதான் குற்றவாளிகளிடம், தற்போது, போலீஸ் கையாளும் 'டெக்னிக்' என்றும் சொல்கிறார்கள்.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால், விபத்து சம்பவங்களும், கொலை, கொள்ளை, கோஷ்டி மோதல் போன்றவையும் குறைந்திருந்தன. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, இவை மீண்டும் அதிகரித்து வருகின்றன. சிறைவாசிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், போலீசாரால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் சிலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கொரோனா அச்சத்தால், முன்புபோல், குற்றவாளிகளை கையாள போலீசாரால்
முடிவதில்லை. குடும்ப பிரச்னை, கோஷ்டி மோதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக
பதியப்படும் வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்யும்போது, 'காய்ச்சல், சளி
எதுவும் இல்லைதானே' என்று கேள்வி கேட்கின்றனர்.
அப்படி இருப்பதாக
அவர்கள் கூறினால், 'கொரோனா இல்லைனு தெரிஞ்ச பிறகுதான் கைது செய்யணும்'
எனக்கூறிவிட்டு, கைது செய்யாமல்கூட சென்றுவிடுகின்றனர். சமீபத்தில்,
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஒரு கிராமத்தில், குடும்ப விவகாரம்
தொடர்பாக, ஒருவரை கைது செய்ய போலீசார் சென்றனர். குற்றவாளி தப்ப
முயன்றுள்ளார்.
அப்போது ஏட்டு ஒருவர், 'தம்பி... உன்னை தொடவே
போறதில்ல... அதுக்காக உன்னை விட்டுவிட முடியாது... நீயா வந்துடு' என
கூறியுள்ளார். மாட்டிக்கொண்டால், 'துவைக்க மாட்டார்கள்' என்ற நம்பிக்கையால்
குற்றவாளியே கைது நடவடிக்கைக்கு முன்வந்தார்.' இதனால் இப்போது
குற்றவாளிகளிடம் தொடவும் மாட்டோம்... விடவும் மாட்டோம் டெக்னிக்தான்,
இப்போதைக்கு...' என்கிறார்கள் போலீசார்.