Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தினமும் 7 கோடி டோஸ் அளவில் கொரோனா தடுப்பூசியை தயாரிப்போம் - இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்

தினமும் 7 கோடி டோஸ் அளவில் கொரோனா தடுப்பூசியை தயாரிப்போம் - இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்

By: Karunakaran Fri, 24 July 2020 10:53:44 AM

தினமும் 7 கோடி டோஸ் அளவில் கொரோனா தடுப்பூசியை தயாரிப்போம் - இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றை வழி. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

தற்போது இந்தியாவில் இந்த மருந்தை உருவாக்க இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ரூ.1000-க்கு குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

indian serum institute,corona vaccine,7 crore doses,oxford university ,இந்தியன் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசி, 7 கோடி அளவுகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

தற்போது இதுகுறித்து இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறுகையில், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும் என்று ஆதர் பூனவாலா கூறியுள்ளார்.


Tags :