Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலங்கரை விளக்கமாக மக்களுக்கு சேவையாற்றுவோம்- தீவிர பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

கலங்கரை விளக்கமாக மக்களுக்கு சேவையாற்றுவோம்- தீவிர பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

By: Monisha Tue, 15 Dec 2020 3:53:33 PM

கலங்கரை விளக்கமாக மக்களுக்கு சேவையாற்றுவோம்- தீவிர பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கினார். நேற்று மாலை வத்தலக்குண்டு வந்த அவருக்கு பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அவர் பேசியதாவது:- சிப்பாய் கழகம் நடைபெறுவதற்கு முன்பாகவே 1757-ம் ஆண்டு இந்திய சுதந்திர போர் தொடங்கி விட்டது. திண்டுக்கல் மண்ணில் மருதநாயகம் என்ற யூசூப்கான் என்பவரால் ஆங்கிலேயருக்கு எதிராக தொடங்கப்பட்ட அந்த சரித்திரம் மறைக்கப்பட்டு விட்டது.

260 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஒரு புரட்சியை திண்டுக்கல் மக்கள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். சுதந்திரமும், ஜனநாயகமும் அன்றாடம் காக்கப்பட வேண்டும். இன்றைக்கு இந்திய ஜனநாயகம் நோய்வாய்பட்டு கிடக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். அதனால் நான் போடும் ஊசி நல்லவர்களுக்கு வலிக்காது. கயவர்களுக்கு வலிக்கும். இப்போதே சிலருக்கு வலிக்க தொடங்கி விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக நமக்கு வலித்தது குறித்து அவர்கள் சிந்திக்கவில்லை.

election,campaign,history,emblem,lighthouse ,தேர்தல்,பிரச்சாரம்,சரித்திரம்,சின்னம்,கலங்கரை விளக்கம்

திண்டுக்கல் மக்கள் நினைத்தால் கத்தியின்றி, ரத்தமின்றி, துப்பாக்கி இன்றி புரட்சியை ஏற்படுத்த முடியும். அதன் கூர்முனையாகத்தான் நான் இருக்க விரும்புகிறேன். ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் மக்கள் கேள்வி கேட்கும் உரிமை வழங்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் நமது கட்சிக்கு உண்டு. ஆட்சியில் பல மாற்றங்கள் செய்ய காத்துக்கொண்டுள்ளோம்.

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்காது என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. டார்ச் லைட் இல்லையென்றால் கவலையில்லை. கலங்கரை விளக்கமாக இருந்து மக்களுக்கு சேவையாற்றுவோம். சாதாரண உருவத்தை விஸ்வரூபமாக மாற்றும் சக்தி நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் எதிரிகளோடுதான் நமக்கு போட்டி. எதிர் சித்தாந்தம் உள்ளவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். அவர்களுடைய கையில் இருந்து அதனை கொடுக்கவில்லை. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொடுக்கிறார்கள். அடிமாட்டு விலைக்கு மக்களை மக்களிடமே விற்கிறார்கள். நமது அரசு அமைந்தால் ரூ.5 லட்சம் மட்டும் அல்ல. தேர்தல் முடிந்த பின்பு ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். எனவே ரூ.5 ஆயிரம் ரூபாய்க்கு விலை போய் விடாதீர்கள் என அவர் பேசினார்.

Tags :
|