Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகமாக பாடுபடுவோம் - பிரதமர் மோடி

உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகமாக பாடுபடுவோம் - பிரதமர் மோடி

By: Karunakaran Wed, 09 Dec 2020 10:39:02 AM

உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகமாக பாடுபடுவோம் - பிரதமர் மோடி

மொபைல் சேவை சங்கம் ஏற்பாடு செய்த இந்திய மொபைல் மாநாட்டில் நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசுகையில், மொபைல் போன் தொழில்நுட்பம், கோடிக்கணக்கானோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பலன்களை அளித்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கமில்லா பரிமாற்றத்துக்கும் மொபைல்போன் தொழில்நுட்பமே காரணம். சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது என்று கூறினார்.

இந்தியாவில் உலகத்திலேயே பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்கும் மொபைல் போன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். வருங்காலத்தில் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகம் ஆவதற்கு நாம் ஒன்றுபட்டு பாடுபடுவோம். 5ஜி சேவையால் பலமடங்கு வேகத்தில் இணையசேவை கிடைக்கும் என மோடி நிகழ்ச்சியில் கூறினார்.

india,5g service,corona vaccine,pm modi ,இந்தியா, 5 ஜி சேவை, கொரோனா தடுப்பூசி, பிரதமர் மோடி

மேலும் அவர், மொபைல்போன் உற்பத்திக்கு மிகவும் விரும்பப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருகிறது. தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவை உலகளாவிய தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி கூடமாக ஆக்குவதற்கு எல்லோரும் பாடுபடுவோம்.இன்னும் 3 ஆண்டுகளுக்குள், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களையும் அதிவேக கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைத்து இணைய வசதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

புதிய தொழில்நுட்பம் வர வர மொபைல்போன்களை மாற்றும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 100 கோடிக்கு மேற்பட்டோர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 75 கோடிக்கு மேற்பட்டோர் இணைய வசதியை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் இந்தியாவில் எவ்வளவு வேகமாக இணைய வசதி ஊடுருவி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். உலகத்திலேயே தொலைத்தொடர்பு கட்டணம் குறைவாக இருப்பது இந்தியாவில்தான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags :
|