Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கங்கனா ரணாவத் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்; அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகிறார்

கங்கனா ரணாவத் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்; அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகிறார்

By: Nagaraj Fri, 11 Sept 2020 9:17:38 PM

கங்கனா ரணாவத் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்; அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகிறார்

பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்... பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் நடித்து வரும் கங்கனா, அதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலை மையப்படுத்திய படத்தை தயாரித்து இயக்கவுள்ளார். இவர் தமிழில் வெளியான தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு மும்பையில் பாலி ஹில் பகுதியில் அலுவலகம்/வீடு உள்ளது.

சமீபத்தில் கங்கனா, சினிமா மாஃபியாக்களை காட்டிலும் மும்பை காவல்துறையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து மகாராஷ்டிரா அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்தது. கங்கனா செப்டம்பர் 9ஆம் தேதி தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து மும்பைக்கு வந்த போது, ஆளும் சிவசேனா ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

politics,kangana,bjp,unity,welcome ,அரசியல், கங்கனா, பாஜ, ஒற்றுமை, வரவேற்போம்

ஏற்கனவே மத்திய அரசு கங்கனாவுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு அளித்துள்ள நிலையில், இந்தியக் குடியரசு கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே , கட்சி ஆதரவாளர்களிடம் கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள கங்கனாவின் வீட்டுக்கு சென்று அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேரில் விசாரித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட கங்கனா ஆர்வமாய் இருப்பதாகத் தெரிவித்தார். கங்கனா பாஜகவில் அல்லது இந்தியக் குடியரசு கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம். ஆனால் அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளார்.

Tags :
|
|