முதல்வர் பூரண நலம் அடைய நாம் தமிழர் கட்சி சீமான் வாழ்த்து
By: Nagaraj Sun, 19 June 2022 11:15:21 PM
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் முக ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது இதையடுத்து அவர் உடல் நலன் பெற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பதால்
திங்கள்கிழமை (ஜூன் 20) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 21)
நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்க பதிவில், மாண்புமிகு முதல்வர்
ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியறிந்தேன். ' அவர்
முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான
விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.