Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவால்னியை படுகொலை செய்யும் நோக்கம் இருந்திருந்தால் நிறைவேற்றி இருப்போம்; ரஷ்ய அதிபர் கருத்து

நவால்னியை படுகொலை செய்யும் நோக்கம் இருந்திருந்தால் நிறைவேற்றி இருப்போம்; ரஷ்ய அதிபர் கருத்து

By: Nagaraj Fri, 18 Dec 2020 09:32:50 AM

நவால்னியை படுகொலை செய்யும் நோக்கம் இருந்திருந்தால் நிறைவேற்றி இருப்போம்; ரஷ்ய அதிபர் கருத்து

நோக்கம் இல்லை... ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியை படுகொலை செய்யும் நோக்கம் தங்களுக்கு இருந்திருந்தால், இந்நேரம் அது நிறைவேற்றப்பட்டு இருக்கும் என்று அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நவால்னி மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது, அமெரிக்க உளவுத் துறை வேண்டுமென்றே பரப்பி வரும் வதந்தியாகும்.

purpose,no,russian president,indictment,denunciations ,நோக்கம், இல்லை, ரஷ்ய அதிபர், குற்றச்சாட்டு, கண்டனங்கள்

நவால்னியைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இருந்திருந்தால், அந்த நோக்கத்தை இந்நேரம் நிறைவேற்றியிருப்போம் என்றாா் அவா்.

ரஷ்ய அதிபரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது சொபியாவிலிருந்து விமானம் மூலம் நவால்னி கடந்த ஆகஸ்ட் மாதம் வந்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு ரஷியா நடத்திய நச்சுத் தாக்குதலே காரணம் என்று ஜொமனி உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Tags :
|