Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றின் மூலம் பரவும் நோய் பரவலை தடுக்க முககவசம் அணிவது அவசியம்

காற்றின் மூலம் பரவும் நோய் பரவலை தடுக்க முககவசம் அணிவது அவசியம்

By: vaithegi Fri, 21 Oct 2022 6:26:39 PM

காற்றின் மூலம் பரவும் நோய் பரவலை தடுக்க முககவசம் அணிவது அவசியம்

சென்னை: தீபாவளி பண்டிகை ... முககவசம் அணிவது அவசியம். இதையடுத்து இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் கூறியதாவது:- முககவசம் என்பது கொரோனா பரவலை மட்டும் தடுக்காமல் புளு காய்ச்சல் உள்ளிட்ட காற்றின் மூலம் பரவும் நோய் பரவலையும் தடுக்கும்.

அதிலும் குறிப்பாக பொது இடங்களுக்கு செல்பவர்கள் முககவசம் அணிவது அவசியம். அரசு கட்டாயப்படுத்தாமல் உள்ளதே தவிர, அதன் அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள் மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

face mask,communicable disease ,முககவசம் ,பரவும் நோய்

முககவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் கடைகளுக்கு முன்பு ஒட்டப்பட்டு உள்ளது. இருப்பினும் மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். மாநகராட்சி சுகாதாரத்துறை, காவல்துறையும் இதை வலியுறுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் வெளியூர் செல்கிறார்கள். பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடைவீதிகளில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

மேலும் இதுபோன்ற பண்டிகைகாலங்களிலாவது பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவது மிகவும் அவசியம். நோய் பரவலை தவிர்க்க முககவசம் அணிவது கட்டாயமும் கூட. இந்த சமுதாயம் பாதுகாப்பானதாக இருக்க ஒவ்வொருவரும் முககவசம் அணிய வேண்டும். இதை மக்கள் உணர வேண்டும். என அவர் கூறினார்.

Tags :