Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரிஸில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பாரிஸில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

By: Nagaraj Mon, 10 Aug 2020 9:14:18 PM

பாரிஸில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

முகக்கவசம் அணிவது கட்டாயம்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இன்று (திங்கட்கிழமை) முதல் பல பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன் நதிக்கரையில் உள்ள கரைகள் மற்றும் திறந்தவெளி சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் 11 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் அனுப்பிய பட்டியலின்படி, 100க்கும் மேற்பட்ட வீதிகள் இந்த உத்தரவின் கீழ் உள்ளன.

france,paris,mask,experts,warning ,பிரான்ஸ், பாரீஸ், முகக்கவசம், நிபுணர்கள், எச்சரிக்கை

இருப்பினும், ஈபிள் டவர், ஆர்க் டி ட்ரையம்பே மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் போன்ற சில பிரபலமான சுற்றுலா இடங்கள் புதிய விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பிரான்ஸில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளன. விதிகளை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

கொவிட்-19 இன் கட்டுப்பாட்டை பிரான்ஸ் எந்த நேரத்திலும் இழக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags :
|
|
|