Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கர்நாடகா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

By: Nagaraj Sat, 24 Dec 2022 7:18:16 PM

கர்நாடகா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கர்நாடகா: இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

அதனால் தற்போது இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் மிக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் கூறியிருப்பதாவது:

face mask,state health minister ,முகக்கவசம் ,மாநில சுகாதாரத்துறை அமைச்சர்

மாநிலத்தில் உள் அரங்குகள் மற்றும் ஏசி ரூம்களில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அத்துடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


இதனை தொடர்ந்து, தொற்று பரவலை தடுக்கும் விதமாக, விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அத்துடன் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :