Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. ரயில் நிலையங்களில் நுழையவும் மாஸ்க் கட்டாயம்..

மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. ரயில் நிலையங்களில் நுழையவும் மாஸ்க் கட்டாயம்..

By: Monisha Fri, 08 July 2022 6:58:40 PM

மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. ரயில் நிலையங்களில் நுழையவும் மாஸ்க் கட்டாயம்..

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

எனவே தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த உத்தரவில், பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவித்தது.

corona,mask,metro,train ,மெட்ரோ,ரயில்,முககவசம்,பயணிகள்,

பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெட்ரோ ரயில் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

Tags :
|
|
|