Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை .. மருத்துவத்துறை அமைச்சர்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை .. மருத்துவத்துறை அமைச்சர்

By: vaithegi Sat, 08 Apr 2023 3:58:17 PM

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை ..  மருத்துவத்துறை அமைச்சர்

சென்னை: கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், எனவே இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சமீப நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

medical department,mask ,மருத்துவத்துறை ,முகக்கவசம்

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னார், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

இதயத்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது அதற்கான அவசியம் இல்லை. மருத்துவமனையில் மட்டும் தான் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் முடக்கி வைத்துள்ளதால் நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :