Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்

இந்த மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்

By: vaithegi Thu, 29 Dec 2022 7:19:16 PM

இந்த மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்

உத்தரகாண்ட் : நாட்டில் BF.7 புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் உயர்ந்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தி கொண்டு வருகிறது.

மேலும் அத்துடன் விமான நிலையங்களில் மீண்டும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 40 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா பாதிப்பு உயரக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

mask,uttarakhand ,முகக்கவசம் ,உத்தரகாண்ட்

எனவே அதன்படி தற்போது பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது உத்தரகாண்டில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக கல்வி இயக்குனர் அவர்கள் கூறியிருப்பதாவது, உத்தரகாண்டில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசர் கொண்டு கை கழுவுதல், உடல் வெப்பநிலை சரிபார்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|