Advertisement

அடுத்து வரும் நாட்களின் வானிலை நிலவரம்

By: vaithegi Mon, 06 Mar 2023 6:39:03 PM

அடுத்து வரும் நாட்களின் வானிலை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் பெய்துள்ள மழை காரணமாக மக்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.

மேலும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், மக்கள் இளநீர், தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே அதன் மூலம் கோடை காலங்களில் ஏற்படும் நோய்யிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather,sunny ,வானிலை ,வெயில்


மேலும் அது மட்டுமில்லாமல் வெயில் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் மார்ச் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை மறுநாள் முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :