Advertisement

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம்

By: vaithegi Wed, 16 Nov 2022 3:30:59 PM

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருமழை தொடங்கியதை தொடர்ந்து பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரள பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather,rain ,வானிலை ,மழை


தமிழகத்தில் திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று முதல் 18ம் தேதி வரை தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதை ஓட்டிய தென்மேற்கு மற்றும்‌ மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேலும் அத்துடன் 19,20ம் தேதி ஆகிய நாட்களில் தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, தெற்கு ஆந்தர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :