Advertisement

அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம்

By: vaithegi Wed, 04 Oct 2023 3:08:17 PM

அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து உள்ளது. இதையடுத்து அதிகபட்சமாக கன்னியாகுமரியின் மைலாடி பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அக்டோபர் 4ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

weather,kanyakumari,tirunelveli ,வானிலை ,கன்னியாகுமரி, திருநெல்வேலி

மேலும் அக்டோபர் 5ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை அடுத்து தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகத்திலும் அரபிக் கடலின், தெற்கு கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :