Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் அடுத்து வரும் சில தினங்களுக்கான வானிலை அறிக்கை

தமிழகத்தின் அடுத்து வரும் சில தினங்களுக்கான வானிலை அறிக்கை

By: vaithegi Sun, 14 May 2023 5:19:26 PM

தமிழகத்தின் அடுத்து வரும் சில தினங்களுக்கான வானிலை அறிக்கை

சென்னை: வங்க கடலில் உருவாகிய மோகா புயலானது இன்று நண்பகல் நேரத்துக்கு பிறகு வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க தேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கவுள்ளது. இதனால் காற்று அதிக வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மே 16-ம் தேதி லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் எனவும், மே17 மற்றும் 18 ஆகிய 2 தினங்களில் இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

weather,rain ,வானிலை ,மழை

மேலும் இது தவிர மே 14ம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும், இதன் காரணமாக மக்களுக்கு அசவுரிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Tags :