Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இணையதளம்... முதல்வர் தொடக்கி வைத்தார்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இணையதளம்... முதல்வர் தொடக்கி வைத்தார்

By: Nagaraj Fri, 23 Sept 2022 9:29:57 PM

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இணையதளம்... முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னை: முதல்வர் தொடங்கி வைத்தார்... எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நிலம் என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் 'தமிழ்நிலம்' என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

fee,no,download,internet,order,copy,patta ,கட்டணம், இல்லை, பதிவிறக்கம், இணையம், உத்தரவு, நகல், பட்டா

இதன்படி பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்ல்லை. முன்னதாக நிலம் எங்கிருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

விடுமுறை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம். பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்கக் கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கட்டணம் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைகக்கு விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும். பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உத்தரவின் நகல், பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணையத்திலேயே கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

Tags :
|
|
|
|