Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு இணையதளம் வாயிலாக யோகா பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு இணையதளம் வாயிலாக யோகா பயிற்சி

By: Nagaraj Sun, 26 July 2020 10:48:32 AM

மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு இணையதளம் வாயிலாக யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி... கொரோனா தடுப்பு பணிகளால் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்க இணையதளம் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவர்களது மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றமும் அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட போலீஸாருக்கு இணையதளம் மூலம் நேற்று யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. காலை 7 மணி முதல் 8.30 மணி வரை இப்பயிற்சி வழங்கப்பட்டது.

depression,police,yoga practice,relationships,internet ,மனஅழுத்தம், போலீசார், யோகா பயிற்சி, நல்லுறவு, இணையதளம்

காவல் ஆணையர் தொடங்கி துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள போலீஸார் அனைவரும் தங்கள் வீடுகள், பணிபுரியும் இடங்களில் இருந்தவாறே இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள 13 காவலர் பயிற்சிப் பள்ளிகளில் நாளை (27-ம்தேதி) முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 1,025 காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தலா 3 நாட்களுக்கு ஒரு பிரிவு என 5 பிரிவாக பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் மன அழுத்தத்தை குறைப்பது, பொதுமக்களுடன் நல்லுறவை பேணுவது, சூழ்நிலையை கையாள்வது ஆகியவை தொடர்பாக வல்லுநர்கள், காவல் உயரதிகாரிகள் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்க உள்ளனர்.

Tags :
|