Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாராந்திர சிறப்பு கட்டண ரயில் நீட்டிப்பு...மதுரை ரயில்வே அறிவிப்பு

வாராந்திர சிறப்பு கட்டண ரயில் நீட்டிப்பு...மதுரை ரயில்வே அறிவிப்பு

By: vaithegi Mon, 18 July 2022 5:13:44 PM

வாராந்திர சிறப்பு கட்டண ரயில் நீட்டிப்பு...மதுரை ரயில்வே அறிவிப்பு

மதுரை : மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ரயில்வே, விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் – நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்புக்கட்டண ரயிலை நீட்டிப்பு செய்வது தொடர்பாக மதுரை தெற்கு ரயில்வே சார்பாக செய்திக்குறிப்பு வெளியானது.

‘விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம்-நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையில் நீட்டிக்கப்படுகிறது.

train,special fare ,ரயில் ,சிறப்பு கட்டணம்

மேலும் அதன்படி எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். இதை தொடர்ந்து வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இதை தொடர்ந்து இந்த ரயில்கள் கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிப்பட்டுள்ளது.

Tags :
|