Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்: பக்தர்கள் வசதிக்காக என அறிவிப்பு

வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்: பக்தர்கள் வசதிக்காக என அறிவிப்பு

By: Nagaraj Sat, 01 July 2023 11:07:20 PM

வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்: பக்தர்கள் வசதிக்காக என அறிவிப்பு

தஞ்சாவூர்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

crowd,velankanni,devotees,special train,announcement ,கூட்ட நெரிசல், வேளாங்கண்ணி, பக்தர்கள், சிறப்பு ரயில், அறிவிப்பு

சனிக்கிழமைகளான ஜூலை 8, 15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1. 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 5. 40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பக்தர்களின் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|