தஞ்சை அரசர் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு
By: Nagaraj Wed, 14 June 2023 6:51:55 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசர் தொடக்கப்பள்ளியில் மாணவர்களை மேள தாளங்கள் உடன் ஆசிரியர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் தொடங்கின. தஞ்சை அரசர் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் நாதஸ்வரம், மேளங்கள் முழங்க ஆசிரியர்களால் பேரணியாக அழைத்து வரப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
இதில் பள்ளி செயலர் ஜெயலெட்சுமி, அரசர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், மேற்பார்வையாளர் ஜெனட் ஷோபா, சிவக்குமார், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைத்து மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா பாட நூல்கள் மற்றும் பாட நோட்டுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் குமார் செய்திருந்தார்.
Tags :
students |