Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை விளார் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

தஞ்சை விளார் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

By: Nagaraj Mon, 11 Sept 2023 10:35:45 AM

தஞ்சை விளார் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

தஞ்சாவூர்: தஞ்சை அருகே விளார் ஊராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி ஜோதி அறக்கட்டளை சார்பில் ரூ. 50,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தான போற்றுதலுக்குரியது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக அவர்கள் செய்த சேவை மிகவும் போற்றத்தக்கது. அவர்களது இன்றியமையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பகுதி வாரியாக தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

welfare scheme assistance,foundation,sanitation workers,panchayat ,நலத்திட்ட உதவி, அறக்கட்டளை, தூய்மைப்பணியாளர்கள், ஊராட்சி

ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சித் தலைவர் மைதிலி ரத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :