Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாங்கள் ரெடி... நீங்கள் தயாரா? பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரத் தயார்

நாங்கள் ரெடி... நீங்கள் தயாரா? பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரத் தயார்

By: Nagaraj Mon, 14 Nov 2022 10:05:07 PM

நாங்கள் ரெடி... நீங்கள் தயாரா? பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரத் தயார்

புதுடில்லி: தயார்... நாங்கள் தயார்... பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரத் தயார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்புரி தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப்சிங்புரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:"பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரிகளின் கீழ் கொண்டு வர வேண்டுமென்றால் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.

deficit,gst,ready to bring,union minister,petrol ,பற்றாக்குறை, ஜிஎஸ்டி, கொண்டு வரத் தயார், மத்திய அமைச்சர், பெட்ரோல்

மாநில அரசுகள் அதற்கு ஒத்துழைத்தால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார். அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.

இதைப்புரிந்துகொள்வது கடினம் அல்ல. மாநிலங்கள் இதிலிருந்து வருவாய் பெறுகிறார்கள். வருமானம் வரும் ஒருவர் அதை ஏன் விட்டுவிட வேண்டும்? மது மற்றும் எரிசக்தி இரண்டும் வருவாய் ஈட்டும் விஷயங்கள். பணவீக்கம் மற்றும் பிற விஷயங்களை பற்றி கவலைப்படுவது மத்திய அரசு மட்டுமே.

Tags :
|