Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்

இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்

By: vaithegi Sun, 27 Aug 2023 10:13:06 AM

இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

heavy rain,tamil nadu,puducherry,karaikal ,கனமழை,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.எனவும் தெரிவித்துள்ளது வானிலை மையம் .

Tags :