Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி-20 மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்

ஜி-20 மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்

By: Nagaraj Thu, 24 Nov 2022 4:23:41 PM

ஜி-20 மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்

மேற்கு வங்கம்: டிசம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவுள்ளார்.

ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 2வது நாள் பாலி உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் ஜி-20 தலைமை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்ப்பதாகும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நடத்துவோம். உலக மாற்றத்திற்கான ஊக்கியாக ஜி-20ஐ உருவாக்குவோம்.

g20 summit,mamtha banerjee,modi ,ஜி-20 உச்சி மாநாடு, மம்தா பானர்ஜி, மோடி

இந்தியாவின் ஜி-20 தலைமையானது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நோக்கமாகவும், தீர்க்கமாகவும், செயல் சார்ந்ததாகவும் இருக்கும். அடுத்த ஒரு வருடத்தில், கூட்டு நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் முதன்மையான சர்வதேச இயக்கமாக ஜி-20யை உருவாக்குவது எங்களின் அதிகபட்ச முயற்சியாக இருக்கும் என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் அதன் தலைவராக பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதன்படி டிசம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார்.இதையடுத்து டிசம்பர் 12 முதல் 14 வரை 3 நாட்கள் மேகாலயாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மேற்கு வங்க அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags :