Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திட, திரவக்கழிவு மேலாண்மையை சரியாக செய்ய தவறியதற்காக மேற்கு வங்கத்திற்கு அபராதம்

திட, திரவக்கழிவு மேலாண்மையை சரியாக செய்ய தவறியதற்காக மேற்கு வங்கத்திற்கு அபராதம்

By: Nagaraj Sun, 04 Sept 2022 5:26:07 PM

திட, திரவக்கழிவு மேலாண்மையை சரியாக செய்ய தவறியதற்காக மேற்கு வங்கத்திற்கு அபராதம்

மேற்குவங்கம்: அபராதம் விதிப்பு... திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை சரிவர செய்யத் தவறியதற்காக மேற்கு வங்க மாநிலத்துக்கு ரூ. 3,500 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு மேற்கொண்ட விசாரணையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க அரசு நகா்ப்புறங்களில் திட மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அந்த வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பை முறையாக செய்யத் தவறியதற்காக ரூ. 2,980 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், தொடா் பாதிப்புகளை ஏற்படுத்தியதன் அடிப்படையில் இந்த அபராதத் தொகை ரூ. 3,000 கோடியாக முழுமை செய்யப்பட்டு விதிக்கப்படுகிறது. அதுபோல, திடக் கழிவு மேலாண்மையை சரிவர செய்யத் தவறிய காரணத்துக்காக ரூ. 500 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

district collectors,vigilance,green tribunal,once ,மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு, பசுமைத் தீர்ப்பாயம், ஒருமுறை

ஒட்டுமொத்தமாக ரூ. 3,500 கோடி அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள்ளாக தனிக் கணக்கை தொடங்கி, அதில் செலுத்த வேண்டும். மேலும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை சரிவர செய்யாததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக சரிசெய்யப்பட வேண்டும்.

கழிவு மேலாண்மை முறையாக நடைபெறுகிா என்பதை மாநில தலைமைச் செயலாளா் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது கண்காணிக்க வேண்டும். அதுபோல, மாவட்ட ஆட்சியா்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இதனை கண்காணிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags :