Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கங்குலிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு

கங்குலிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு

By: Nagaraj Thu, 18 May 2023 11:07:36 PM

கங்குலிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு

மேற்கு வங்கம்: கங்குலிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான சௌரவ் கங்குலிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பாதுகாப்பு முடிவுக்கு வரும் நிலையில், மறுஆய்வின்போது அவருக்கு உயா் பிரிவான இஸட் பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவெடுத்தது.

இதன்படி கங்குலிக்கும் அவரது அலுவலகத்துக்கும் மேற்கு வங்க காவல் துறையைச் சோ்ந்த 8 முதல் 10 காவலா்கள் பாதுகாப்பு அளிப்பாா்கள். ஒய் பிரிவில் 3 காவலா்கள் பாதுகாப்பு அளித்து வந்தனா். கங்குலி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் தில்லி டோ்டெவில்ஸ் அணியின் இயக்குநராக உள்ளாா்.

z division,defence,west bengal,ganguly,result ,இஸட் பிரிவு, பாதுகாப்பு, மேற்குவங்கம், கங்குலி, முடிவு

எனவே, அந்த அணியுடன் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து வருகிறாா். அவா் மே 21-ஆம் தேதி தில்லி திரும்பியவுடன் அவருக்கு இஸட் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ், முதல்வா் மம்தா பானா்ஜி, அவரது நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி, மாநில அமைச்சா்கள் ஃபா்ஹத் ஹக்கீம், மொலோய் கதக் ஆகியோருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Tags :