Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனை ஆதரிப்பதன் வாயிலான 3ம் உலக போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் என குற்றச்சாட்டு

உக்ரைனை ஆதரிப்பதன் வாயிலான 3ம் உலக போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் என குற்றச்சாட்டு

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:54:42 PM

உக்ரைனை ஆதரிப்பதன் வாயிலான 3ம் உலக போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் என குற்றச்சாட்டு

மின்ஸ்க்: மேற்கத்திய நாடுகள் போரை தூண்டுகின்றன... உக்ரைனை ஆதரிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி வருவதாக பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ கூறியுள்ளார்.

தொலைக்காட்சியில் பேசிய லுகாஷென்கோ, “உக்ரைனுக்கு மேற்கத்திய ஆதரவு அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது” என்றார். உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு மூன்றாம் உலகப் போரைத் தூண்டுகிறது. நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளையும் அழைக்கிறேன்.

case,crime,president, ,அதிபர், குற்றச்சாட்டு, பெலாரஸ், உறுதிமொழி,புதின்

லுகாஷென்கோவின் கருத்துகளை ரஷ்யா கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும், அடுத்த வாரம் அவருடன் அதிபர் விளாடிமிர் புதின் ஆலோசனை நடத்துவார் என்றும் ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

முன்னதாக, பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த நடவடிக்கை அணுஆயுத பரவல் தடை உறுதிமொழியை மீறுவதாக இருக்காது என்றும் புதின் கூறியிருந்தார்.

Tags :
|
|