Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கத்திய நாடுகள் பரிசீலனை... ரஷ்யாவின் வைரங்கள் இறக்குமதிக்கு தடை?

மேற்கத்திய நாடுகள் பரிசீலனை... ரஷ்யாவின் வைரங்கள் இறக்குமதிக்கு தடை?

By: Nagaraj Sun, 05 Nov 2023 09:43:13 AM

மேற்கத்திய நாடுகள் பரிசீலனை... ரஷ்யாவின் வைரங்கள் இறக்குமதிக்கு தடை?

நியூயார்க்: ரஷ்ய வைர இறக்குமதிக்கு தடை?... கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து ரஷ்ய வைரங்களுக்கும் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருகின்றன.

உலகின் ஒட்டுமொத்த வைர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்பட்டு, பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகர தொழிற்சாலைகளில் பட்டை தீட்டப்பட்டு வருகிறது.

diamonds,import,western countries,russia,ban,canada ,வைரங்கள், இறக்குமதி, மேற்கத்திய நாடுகள், ரஷ்யா, தடை, கனடா

வைர ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ரஷ்ய அரசு ஈட்டி வருவதால் அதற்கு தடை விதிக்க ஜி-7 நாடுகள் முடிவெடுத்துள்ளன.

தற்போது வாய்மொழி உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆன்ட்வெர்ப் நகர வியாபாரிகள், கனடா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.

Tags :
|
|
|