Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கத்திய பாணி கழிவறைகள் வாயிலாக பரவும் கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேற்கத்திய பாணி கழிவறைகள் வாயிலாக பரவும் கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By: Nagaraj Fri, 19 June 2020 1:39:41 PM

மேற்கத்திய பாணி கழிவறைகள் வாயிலாக பரவும் கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆய்வில் அதிர்ச்சி தகவல்... வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் தண்ணீர் திறந்து விடும்போது அதிலிருந்து வெளியேறும் காற்று, நீர்த்துளிகள் வழியாகவும் கொரோனா பரவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யாங்சோயு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரசானது மனிதனின் செரிமானப் பாதையிலும் தேங்கி உயிர்வாழக் கூடியது எனவே அது இயற்கை உபாதைகளின் வழியாகவும் மனிதர்கள் மூலம் பரவும் அபாயத்தைக் கொண்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:

study includes trauma,toilet,corona,spreads,water opening ,
ஆய்வில் அதிர்ச்சி, கழிவறை, கொரோனா, பரவுகிறது, தண்ணீர் திறப்பு

வெஸ்ட்ரன் டாய்லெட்டுகளில் தண்ணீரை திறந்து விடும்போது அதிலிருந்து வெளியேறும் காற்று, நீர்த்துளிகள் வழியாக மனிதனுக்கு கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரைத் தொடர்ந்து மற்றவர்கள் அந்த டாய்லெட்டைப் பயன்படுத்தினால் மூச்சு விடுவதன் மூலம் பரவும் அபாயம் உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

ஆய்வின் தலைவர் மிஸ்டர் வாங்க் கூறியதாவது: கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைந்த அளவேனும் தவிர்க்க அடுத்த முறை வெஸ்ட்ரன் டாய்லெட்டைப் பயன்படுத்தினால் தண்ணீர் திறந்து போது பவுலை மூடிவிட்டு திறந்து விடுங்கள்

அதேபோல் முடிந்த அளவு பொதுக்கழிப்பிடங்களைத் தவிருங்கள் என்றும் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இந்த ஆய்விலும் தண்ணீர் திறந்து விடும்போது காற்றில் வைரஸ் பரவுகிறது, அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைக் கண்டறியவில்லை.

ஆனால் பரவுகிறது என்பதை மட்டும் உறுதி செய்துள்ளனர். எனவே எதுவானாலும் அதன் வீரியம் அதிகமாகத்தான் இருக்குமே தவிர குறைவாக இருக்காது என்பது உறுதி என கூறி உள்ளார்.

Tags :
|
|