Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • (WFH) குறித்து ஐடி நிறுவனங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்

(WFH) குறித்து ஐடி நிறுவனங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்

By: vaithegi Mon, 13 June 2022 10:54:56 PM

(WFH)  குறித்து ஐடி நிறுவனங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளதாக  தகவல்

இந்தியா: நாட்டில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட இந்தியாவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு வீட்டிலிருந்து பணியைத் தொடர (WFH) சில திட்டங்களை வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, TCS, Infosys மற்றும் HCL Tech உள்ளிட்ட பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT) கலப்பின மாடலைத் தேர்வு செய்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. சமீபத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது ஹைபிரிட் மாடலின் விதிகளை ஊழியர்களுக்கு தெரிவித்தது.

technology companies,india,lockdown ,தொழில்நுட்ப நிறுவனங்கள் ,இந்தியா,லாக்டவுன்

ஆப்பிள் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது நிறுவனம் தொலைதூரத்திலும் அலுவலகத்திலிருந்தும் வேலை செய்வதற்கு இடையில் ஒரு இடைநிலையைக் கண்டறிய முயற்சிப்பதாக கூறி இருக்கிறார். ஏனெனில் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் ஊழியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இப்போது TCS நிறுவனத்தின் முடிவை கவனிக்கையில், அவை தொலைநிலை பணியை எளிதாக்குவதற்கு சரியான சூழ்நிலைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

தற்போது உலகம் முழுவதிலும் லாக்டவுன் நடவடிக்கைகள் முழு அளவில் நடைமுறைக்கு வருவதால், தலைமை நிதி அதிகாரிகளின் (CFOs) கார்ட்னர் கணக்கெடுப்பில் இருந்து இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக டிசிஎஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கணக்கெடுக்கப்பட்ட 300 CFOக்களில் ஏறக்குறைய 74 சதவீதம் பேர் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு தங்கள் ஆன்-சைட் பணியாளர்களில் குறைந்தபட்சம் 5 சதவீதத்தை நிரந்தர தொலைநிலை பணிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது

Tags :
|