Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றப்புலனாய்வு விசாரணையில் கூறியது என்ன? கருணா விளக்கம்

குற்றப்புலனாய்வு விசாரணையில் கூறியது என்ன? கருணா விளக்கம்

By: Nagaraj Fri, 26 June 2020 11:56:40 AM

குற்றப்புலனாய்வு விசாரணையில் கூறியது என்ன? கருணா விளக்கம்

என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன் என தெரிவித்துள்ளார் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய கருணாவிடம் நேற்று மாலை 5.30 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. இந்த விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

karuna,investigation,criminal,news ,விசாரணை, உண்மை, கருணா, இராணுவம், தேர்தல் பிரசாரம்

அத்துடன் அரசியல் வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம்.

ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்' என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கருணாவின் கருத்து தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்பட்டதா என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை.

அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்றபோது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை' என தெரிவித்தார்.

Tags :
|