Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை விட பெரிய குற்றம் என்ன இருக்கிறது? - சிரக் பஸ்வான்

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை விட பெரிய குற்றம் என்ன இருக்கிறது? - சிரக் பஸ்வான்

By: Karunakaran Mon, 02 Nov 2020 6:51:08 PM

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை விட பெரிய குற்றம் என்ன இருக்கிறது? - சிரக் பஸ்வான்

பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் தேர்தலில் போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிரக் பஸ்வான் பேட்டி அளித்தபோது, முதல்வர் கடந்த 15 ஆண்டுகளாக நல்லாட்சி செய்பவர் என்ற அடையாளத்தை கொண்டுள்ளார். ஆனால் இப்போது, அவரது கொள்ளை அம்பலமாகி வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர், முதல்வர் ஒருபோதும் முங்கரில் பக்தர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைப் பற்றி பேசவில்லை. ஊழல் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர் லாலுவுக்கு எதிராக இருந்ததால் அவர் பல்துராம் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து 2015-ல் ஆட்சியைமத்தார் என்று கூறினார்.

greater crime,gun shoot,bihar,chirac baswan ,பெரிய குற்றம், துப்பாக்கி சுடு, பீகார், சிராக் பாஸ்வான்

மாநிலத்தில் அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், துர்கா பக்தர்களை சுட்டுக் கொல்வதையும் விட பெரிய குற்றம் என்ன இருக்கிறது? நிதிஷ் குமார் அரசு மஹிசாசுரனின் ஒரு வடிவமாக மாறியுள்ளது. துர்கா பூஜையின் போது கூட்டம் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக, கூட்டத்தை கட்டுப்படுத்த மக்களை நீங்கள் சுடுவீர்களா? என சிரக் பஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார்.

முங்கர் நகரில் கடந்த திங்கட்கிழமை துர்கை சிலைகளை கரைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக சென்றபோது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால், வாக்குவாதம் முற்றி வன்முறையாக மாறியது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார், போலீசார் உள்பட பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


Tags :
|