Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? - வெளியான முக்கிய தகவல்

ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? - வெளியான முக்கிய தகவல்

By: Karunakaran Sat, 08 Aug 2020 6:09:39 PM

ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? - வெளியான முக்கிய தகவல்

கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

air india express,plane crash,kerala,kozhicode ,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விமான விபத்து, கேரளா, கோழிக்கோடு

இந்த விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. விபத்துக்குள்ளான விமானம் முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் மூலம், விமானம் விமான ஓடுதளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும். பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடினமான ஒன்று. ஆனால் இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் மட்டுமே உள்ளது. விமான விபத்திற்கு முன் விமானம் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags :
|