Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்ப்புக்கு காரணம் என்ன? எம்.பி., சித்தார்த்தன் விவகாரம் குறித்து விளக்கம்

எதிர்ப்புக்கு காரணம் என்ன? எம்.பி., சித்தார்த்தன் விவகாரம் குறித்து விளக்கம்

By: Nagaraj Sun, 11 Dec 2022 11:56:10 AM

எதிர்ப்புக்கு காரணம் என்ன? எம்.பி., சித்தார்த்தன் விவகாரம் குறித்து விளக்கம்

கொழும்பு: எம்.பி., சித்தார்த்தன் பெயர் பரிந்துரை... அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது


எனினும் அவருக்கு வெளியிடப்பட்ட எதிர்ப்பு இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்விற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்ட நிலையில், வரவுசெலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் கூட்டமைப்பு கலந்துகொள்ளாதமை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் கூறியுள்ளார்.

name,nomination,members of parliament,committee,mentioned ,
பெயர், பரிந்துரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழு, குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசியல் அமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவர்கள் அந்த பேரவையையும் அதிகாரப் பகிர்வு விடயத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவேதான் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதற்கு எதிராக தமது பெயரை பரிந்துரைத்தது என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|