Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன? - முக ஸ்டாலின் கேள்வி

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன? - முக ஸ்டாலின் கேள்வி

By: Karunakaran Wed, 26 Aug 2020 4:06:59 PM

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன? - முக ஸ்டாலின் கேள்வி

குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார். 40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற - 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய 'குட்கா பேர ஊழலில்' வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்துக் கடைநிலை ஊழியரான சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். நவம்பர் 2018-ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட ஒரு சி.பி.ஐ. விசாரணையில்– வருமான வரித்துறையின் கோப்புகளையே அ.தி.மு.க. அரசு காணாமல் போகச் செய்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

alliance,gutka scandal,stalin,admk ,கூட்டணி, குட்கா ஊழல், ஸ்டாலின், ஏ.டி.எம்.கே.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதலமைச்சர் பழனிசாமியும், மத்திய பா.ஜ.க. அரசும் வரிந்து கட்டிக் கொண்டு, அதனால் ஏற்படும் அவமானம் பற்றிக் கவலைப்படாமல், காப்பாற்றுவதில் உள்ள 'அறிவிக்கப்படாத கூட்டணி' என்ன? அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐயைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :
|