Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடா பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் எந்த பகுதி நேர தொழிலில் ஈடுபடலாம்!!!

கனடா பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் எந்த பகுதி நேர தொழிலில் ஈடுபடலாம்!!!

By: Nagaraj Wed, 14 Sept 2022 11:07:49 AM

கனடா பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் எந்த பகுதி நேர தொழிலில் ஈடுபடலாம்!!!

கனடா: பகுதி நேர தொழில்கள் பரிந்துரை... கனடாவில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் எவ்வாறான பகுதி நேரத் தொழில்களில் ஈடுபட முடியும் என்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2021-2022ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களின் சராசரி வகுப்புக் கட்டணங்கள் 6693 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கோடை காலத்தில் அநேகமான கனேடிய மாணவர்கள் பகுதி நேர தொழில்களில் ஈடுபடுபதற்கு போதியளவு கால அவகாசம் காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டக்கூடிய சில தொழில்கள் பற்றிய விபரங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் ஓரளவு பெரிய நகரப் பகுதிகளில் வாழ்ந்து வந்தால் ரெஸ்டாரன்ட்களில் பார்தண்டர் மற்றும் சர்வர் தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மணித்தியாலம் ஒன்றுக்கு 15 டொலர்கள் என்ற அடிப்படையில் சம்பாதிக்க முடியும். இடத்திற்கு இடம் இது வேறுபடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

income,students,canada,part time jobs,information ,வருமானம், மாணவர்கள், கனடா, பகுதி நேர தொழில்கள், தகவல்

ஆன்லைன் ப்ரீலான்ஸ் சர்வீஸ்: இணைய வழியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துக்கொள்ள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ஆன்லைன் புரூப்ரீடிங் ப்ரீலான்ஸ், பிளாக் ரைட்டர், கிராபிக் டிசைனர், வீடியோ எடிட்டிங் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் போன்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் வருமானம் ஈட்டிக் கொள்ள முடியும்.

உங்களிடம் புதிய வாகனம் (2014 அல்லது அதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்டவை) இருந்தால் மணிக்கு 23 டொலர்கள் சம்பாதிக்க முடியும். ஊபர், லிப்ட் போன்ற நிறுவனங்களின் ஊடாகவும் வாகனங்களை பதிவு செய்து கொண்டு பகுதி நேர பணிகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


ஊபர் ஈட்ஸ், டோர்டேஷ் அல்லது ஸ்கிப்தடிஷஸ் போன்ற நிறுவனங்களில் இணைந்து கொண்டு உணவு விநியோகம் செய்வதன் மூலம் பகுதிநேர தொழில்களில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 25 டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
|
|