Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்புக்கு முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டால் அரசியலில் என்ன நடக்கும்?

டிரம்புக்கு முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டால் அரசியலில் என்ன நடக்கும்?

By: Karunakaran Sat, 03 Oct 2020 6:35:51 PM

டிரம்புக்கு முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டால் அரசியலில் என்ன நடக்கும்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக டிரம்ப் அலபாமாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் டிரம்பின் தேர்தல் பணிகள் மற்றும் அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டிரம்புக்கு வைரஸ் அறிகுறிகள் தீவிரமடைந்து, ஜனாதிபதியாக தனது பங்கை நிறைவேற்ற முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டால் என்ன ஆகும்? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நாட்டை வழிநடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவரது வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.

america,politics,trump,corona impact ,அமெரிக்கா, அரசியல், டிரம்ப், கொரோனா தாக்கம்

அமெரிக்காவைப் பொருத்தவரை, அரசியலமைப்பிலும் கூட்டாட்சி சட்டத்திலும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின்படி, அதிபர் டிரம்ப் அந்த தீர்மானத்தை தானே செய்ய முடியும். மேலும் செனட்டுக்கு எழுதிய கடிதத்துடன், அதிகாரப்பூர்வமாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் அதிகாரத்தை ஒப்படைக்க முடியும். டிரம்ப் மீண்டும் அதிகாரத்தை திரும்பப் பெறுவதாக செனட் சபையில் அறிவிக்கும் வரையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆட்சி செய்வார்.

25ஆவது திருத்தத்தில் மற்றொரு விதியும் உள்ளது. ஜனாதிபதியால் தற்காலிகமாக தனது அதிகாரத்தை மற்றொருவருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், துணை ஜனாதிபதியும் அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் இணைந்து தொழில்நுட்ப ரீதியாக அதிகாரத்தை ஜனாதிபதியிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியும். ஜனாதிபதியிடம் இருந்து நிரந்தரமாக அதிகாரத்தை பெறுவதற்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தலாம். ஆனால், ஜனாதிபதி கோமா நிலையில் இருந்தாலோ அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த விதியை பயன்படுத்த முடியும்.


Tags :
|