Advertisement

வொர்க் ப்ரம் ஹோம் நிறுவனங்கள்செய்யும் செயல் ..

By: Monisha Wed, 13 July 2022 8:06:09 PM

வொர்க் ப்ரம் ஹோம் நிறுவனங்கள்செய்யும் செயல் ..

தமிழ்நாடு: கொரோனா தொற்று அச்சத்தால் இந்திய நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்த நிலையில், கிட்டதட்ட 3 வருடங்களாகப் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் தற்போது இதுவே பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. சில வாரங்கள் முன்பு வரையில் இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வந்த நிலையில், தற்போது நிலைமை மொத்தமாக மாறி நிறுவனமே ஊழியர்களுக்குக் கேட்டாகமல் வொர்க் பர்ம் ஹோம் கொடுக்கத் துவங்கியுள்ளது.

ஏப்ரல், மே மாதம் மட்டும் அமெரிக்கச் சந்தையில் பல துறையைச் சேர்ந்த பல ஆயிரம் ஊழியர்களுக்கும் தினமும் சர்வே அனுப்பப்பட்டும், பல லட்சம் பேரின் பதில்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

work,home,company,salary ,வொர்க் ப்ரம் ஹோம்,நிறுவனம், சம்பளம்,
சர்வே,

இந்த ஆய்வில் பங்குபெற்ற 38 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குத் தானாக முன்வந்து வீட்டில் இருந்தும், தங்களுக்குப் பிடித்தமான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறது. இதேநேரத்தில் இந்த ஒரு சலுகையை அடிப்படையாக வைத்து ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்காமல் உள்ளது நிறுவனங்கள்.

இதேபோல் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் உயர்வின் அளவு குறைந்துள்ளது என 52.4 சதவீத பேர் பதில் அளித்துள்ளனர். அதேபோல் பல நிறுவனத்தில் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும் வொர்க் பரம் ஹோம் கொடுக்கப்படுகிறது என்றும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|