Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்தது என்ன... வெடித்த மக்கள் போராட்டம்; அடுத்த அரச தலைவர் யார்?

அடுத்தது என்ன... வெடித்த மக்கள் போராட்டம்; அடுத்த அரச தலைவர் யார்?

By: Nagaraj Sat, 09 July 2022 7:29:43 PM

அடுத்தது என்ன... வெடித்த மக்கள் போராட்டம்; அடுத்த அரச தலைவர் யார்?

இலங்கை: அரச தலைவராவாரா ரணில்... இலங்கை அரசியலமைப்பின் படி, கோட்டாபய ராஜபக்ச அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய அரச தலைவரை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் வரை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு ரணில் விக்ரமசிங்க தற்காலிக அரச தலைவராக பதவியேற்பார்.

பதவிக்காலம் முடிவதற்குள் அரச தலைவர் பதவி விலகினால் அரசியலமைப்பின் 40 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இந்த நடைமுறையின் படி நாடாளுமன்றம் ஓர் அரச தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

அரச தலைவர் பதவியை ராஜினாமா செய்தால், அவர் இராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின் அரச தலைவரின் இராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் வெற்றிடமாகவுள்ள அரச தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

head of state,chance,resignation,prime minister ranil,party leaders ,அரச தலைவர், வாய்ப்பு, ராஜினாமா, பிரதமர் ரணில், கட்சி தலைவர்கள்

ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அரச தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அரச தலைவர் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் (எண். 2 இன் 1981) நாடாளுமன்றத்தால் புதிய அரச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது குறிப்பிடுகிறது. புதிய அரச தலைவர் பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் அரச தலைவராக செயற்படுவார். இந்தக் காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயல்பட நியமிக்கப்படுவார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவர் மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும். கடந்த பொதுத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று, தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் நாடாமன்றம் சென்ற ரணில், ராஜபக்சர்கள் மீதான அதிருப்தி காரணமாக எழுந்த மக்கள் புரட்சியால் பிரதமர் பதவியை தனதாக்கிக் கொண்டார்.

அதே போலவே மீண்டும் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, கட்சித் தலைவர்களின் தீர்மானம், அரசியலமைப்பு ஏற்பாடுகளின் படி, ரணில் அரச தலைவர் ஆசனத்தை கைற்றும்வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|