Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் மாதம் மட்டும் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவிப்பு

ஜூன் மாதம் மட்டும் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவிப்பு

By: vaithegi Wed, 03 Aug 2022 6:39:07 PM

ஜூன் மாதம் மட்டும் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதன்படி புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

whatsapp,disabled ,வாட்ஸ்அப் ,முடக்கம்

இதை அடுத்து விதிமீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையிலும், விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் மட்டும் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Tags :