Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்அப் வாயிலான பண பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய Whatsapp நிறுவனம் திட்டமிடல்

வாட்ஸ்அப் வாயிலான பண பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய Whatsapp நிறுவனம் திட்டமிடல்

By: vaithegi Thu, 21 Sept 2023 2:37:02 PM

வாட்ஸ்அப் வாயிலான பண பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய whatsapp நிறுவனம் திட்டமிடல்


இந்தியா: இந்தியாவில் Phonepe, G- pay உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகள் வாயிலாக மக்கள் அன்றாடம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலி வாயிலாகவும் பண பரிமாற்றம் செய்யும் வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இதனை அடுத்து இந்த புதிய நடைமுறைக்கு தேசிய பண பரிவர்த்தனை கழகமும் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது கோடிகணக்கானோர் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பி கொண்டு வருகின்றனர்.

whatsapp,money transaction service ,whatsapp ,பண பரிவர்த்தனை சேவை


இந்த வாட்ஸ்அப் பணப்பரிவர்த்தனை குறுஞ்செய்தி அனுப்புவது போல மிகவும் எளிதாகவும் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதால் பெரும்பாலானோர் இதனை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் பரிவர்த்தனை சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. எனவே இதன் வாயிலாக பயனர்கள் எந்த ஒரு இணையதளத்தையும் செயலிகளையும் பயன்படுத்தாமல் நேரடியாகவே வாட்ஸ்அப் வாயிலாக பணத்தை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :