Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • WhatsApp நிறுவனம் சில ப்ரைவசி அப்டேட் குறித்து தனது........ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

WhatsApp நிறுவனம் சில ப்ரைவசி அப்டேட் குறித்து தனது........ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

By: vaithegi Thu, 16 June 2022 5:57:19 PM

WhatsApp நிறுவனம் சில ப்ரைவசி அப்டேட் குறித்து தனது........ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

இந்தியா : சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக வாட்ஸப் ஆப் இல்லாத ஆண்ட்ராய்டு போனே கிடையாது. அந்த அளவிற்கு அனைவராலும் எளிமையாக பயன்படுத்தக்கூடியவை. வாட்ஸப் ஆப். கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் வாட்ஸப் ஆப் மூலம் தான் அனுப்பப்பட்டது.

இதை தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. யாரிடம் எந்த ஒரு விவரத்தை கேட்காலம், மேலும் பயனர்கள்; பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக சமூக வலைதள நிறுவனமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது.

whatsapp,corona,social networking company ,வாட்ஸ்அப் ,கொரோனா ,சமூக வலைதள நிறுவனம்

அந்த வகையில் ப்ரைவசி கண்ட்ரோல் செட்டிங்ஸை மேம்படுத்தி இருப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் குறித்த விவரங்களை மறைத்து வைத்துக் கொள்ள உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் ப்ரைவசியில் last seen, status, about ஆகியவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில் தற்போது profile picture யாருக்கெல்லாம் தெரியும் படி வைக்கலாம், புதிய வாட்ஸ் அப் குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றுக்கு ப்ரைவசி கட்டுப்பாட்டை பயனர்களுக்கு கொடுத்து இருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

இதன் மூலம் வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸை எப்படி முக்கியமானவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கிறோமோ profile picture-ஐயும் Everyone, My Contact & My Contact Except என்ற ஆப்ஷனை பயன்படுத்தி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதேபோல் புதிதாக வாட்ஸ் அப் குழுவில் தெரியாதவர்கள் மூலம் சேர்க்க முடியாதபடி அதற்கும் Everyone, My Contact & My Contact Except என்ற படிநிலைகளை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம். இதில் Nobody என்ற ஆப்ஷன் Last seen, profile picture மற்றும் about ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|