Advertisement

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது

By: vaithegi Thu, 05 Oct 2023 2:11:05 PM

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது

இந்தியா: நண்பர்களுடன் உரையாடும் போது வாட்ஸ்அப்பில் முக்கிய செய்தியை மட்டும் பின் செய்து கொள்ளும் படியான அப்டேட் வெளியீடு ... பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் பல அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. அதாவது, அவதார் வடிவிலான எமோஜிகள், HD விடீயோக்களை பகிர்வது,

தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை mute செய்வது, பிரபலங்களை பின்தொடர்வது, ஈமெயில் மூலமாக அக்கௌன்ட் லாகின் செய்யும் வசதி, ஒரே வாட்ஸ்அப் செயலியில் ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கௌன்ட்டை லாகின் செய்யும் வசதி என்று அடுக்கடுக்காய் பல அப்டேட் வழங்கபட்டு உள்ளது.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்அப்

இந்த நிலையில் தற்போது ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் பேசிய சேட்டிலிருக்கும் குறிப்பிட்ட 1 செய்தியை மட்டும் பின் செய்து கொள்ளும் அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 3 முக்கிய சேட்களை பின் செய்யும் வசதி இருக்கும் நிலையில் தற்போது குறிப்பிட்ட நபரின் செய்தியை பின் செய்யும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்போதைக்கு இப்புதிய அப்டேட் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து பயனர்களும் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|