Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சில மாடல் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் சேவை விரைவில் நிறுத்தம்

சில மாடல் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் சேவை விரைவில் நிறுத்தம்

By: Nagaraj Fri, 02 Sept 2022 10:49:08 AM

சில மாடல் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் சேவை விரைவில் நிறுத்தம்

நியூயார்க்: வாட்ஸ் அப் நிறுவனத்தின் முடிவு... குறிப்பிட்ட ஐபோன் மாடல்களில் வாட்ஸ்ஆப் விரைவில் தனது சேவையை நிறுத்தவுள்ளது.


தகவல் தொடர்புக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சில பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்ஆப் விரைவில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் சமீபத்திய அப்டேட்டினால் வருகிற அக்டோபர் 24 முதல் ஐஓஎஸ் 10 (iOS 10) மற்றும் ஐஓஎஸ் 11(iOS 11) மென்பொருள் தளங்களில் வாட்ஸ்ஆப் இயங்காது.

whatsapp,company,end,iphone,service,termination,notification ,வாட்ஸ் அப், நிறுவனம், முடிவு, ஐபோன், சேவை, நிறுத்தம், அறிவிப்பு

ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 ஆகிய மென்பொருள் பதிப்புகள் ஐபோன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. எனினும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி ஆகிய மாடல்களில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இவ்விரண்டு மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இதைப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்ஆப் எச்சரிக்கை செய்தியினை அனுப்பி வருகிறது.


மேற்குறிப்பிட்ட பயனர்கள் வாட்ஸ்ஆப் பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்த, அவர்களின் ஐபோன்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஐபோன் பயனர்கள் ஐஓஎஸ் 12( (iOS 12) அல்லது அதற்கு அடுத்த மென்பொருளை அப்டேட் செய்திருக்க வேண்டும். அதுபோல ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆண்ட்ராய்டு 4.1 (Android 4.1) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

Tags :
|
|